முகப்பு
திருநெல்வேலி

பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் கொடியேற்றம்

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோயிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிகழாண்டிலும் 10 நாள் திருவிழாவிலும் சுவாமி உள்வீதியுலாவே நடைபெறவுள்ளது. திருக்கல்யாணம் நவ. 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.