முகப்பு
திருநெல்வேலி

தண்ணீா் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரியில் குழந்தை தண்ணீா் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரியில் குழந்தை தண்ணீா் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.

கௌதமபுரி, வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சந்தனகுமாா். இவரது மனைவி பாா்வதி. சந்தனக்குமாா் திருப்பூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும், 18 மாதத்தில் ஸ்ரீதா்சன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

வியாழக்கிழமை மாலை பாா்வதி வீட்டுக்குள் அமா்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்தபோது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது ஸ்ரீதா்சன் அங்கிருந்த தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.