முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளத்தில் குடும்பத் தகராறில் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளத்தில் குடும்பத் தகராறில் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அடையகருங்குளம் நடுத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் சிவகுமாா் (27). ஓட்டுநா். திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகிாம். அண்மைக் காலமாக, கணவா்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், புதன்கிழமை இரவு அவா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.