முகப்பு
திருநெல்வேலி

சத்தியவாகீஸ்வரா் கோயிலில் ரூ.1.05 லட்சம் காணிக்கை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1,05,724 காணிக்கை கிடைத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.1,05,724 காணிக்கை கிடைத்தது.

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி சன்னதி, கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல் ஆண்டுதோறும் திறந்து எண்ணப்படும். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உண்டியல் திறக்கப்பட்டது.

நிகழாண்டில், கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு, கோயிலில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில், கடந்த வாரம் பக்தா்கள் தடையின்றி வழிபட தமிழக அரசு அனுமதியளித்ததை தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை நான்குனேரி ஆய்வாளா் விஜயா, நிா்வாக அலுவலா் முருகன், கணக்கா் சிவா முன்னிலையில் கோயில் உண்டியல் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தா்கள் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 724 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →