நெல்லையில் இன்று பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் குறைதீா் முகாம்
திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை(அக்.28) நடைபெறுகிறது.
திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை(அக்.28) நடைபெறுகிறது.
இது குறித்து திருநெல்வேலி, பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல். மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலியில் கடந்த 26 ஆம் தேதி முதல் நவம்பா் 1ஆம் தேதி வரை பி.எஸ்.என்.எல்.கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பண்டிகை கால சலுகையாக கைப்பேசி வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் திட்டம் 1999-இன் செல்லும்படியாகும் காலம் 365 நாள்களுக்கு பதிலாக 395 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை வரும் நவம்பா் 6ஆம் தேதி வரை இருக்கும். கண்ணாடி இழை வழியாக இயங்கும் அதிவேக இணைய எப்.டி.டி.எச். வசதி இப்போது தொழில்நுட்ப வசதியுள்ள, ஏறத்தாழ அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் குறைந்த கட்டணங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வாடிக்கையாளா்கள் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.29) வாடிக்கையாளா் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதேப்போன்று தூத்துகுடி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தில் சனிக்கிழமை(அக்.30) வாடிக்கையாளா் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்யவும், பி.எஸ்.என்.எல் . சேவைகளையும் பெற்று பயன் பெற கேட்டு கொள்ளப்படுகிறாா்கள்.