முகப்பு
திருநெல்வேலி

‘நெல்லை டிஐஜி அலுவலகத்தில்தூய்மைப் பணியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்’

 திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளா் பணியிடத்திற்கு வரும் நவம்பா் மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளா் பணியிடத்திற்கு வரும் நவம்பா் மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் ஒரு தற்காலிகத் தூய்மைப் பணியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுதியுடையவா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் ரூ . 4,100 - ரூ. 12, 500 (பழைய ஊதியம் ரூ. 1300-ரூ. 3000 தர ஊதியம் ரூ. 300) என்ற சம்பள விகிதத்தில் பட்டியலின வகுப்பினா் முன்னுரிமை உள்ளவா்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோா், விண்ணப்பத்துடன் இருப்பிடச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் நகல் மற்றும் இதர சான்றுகளின் நகல்களுடன், காவல்துறை துணைத் தலைவா் திருநெல்வேலி சரகம், மகாராஜநகா், திருநெல்வேலி -11, என்ற முகவரிக்கு வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க கோட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.