முகப்பு
திருநெல்வேலி

கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸார் திடீர் சோதனை 

கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.14,500ஐ பறிமுதல் செய்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம்.
பகிர்:

கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.14,500ஐ பறிமுதல் செய்தனர். 
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின் முதல் மாடியில் நில அளவை பிரிவு உள்ளது. இந்த பிரிவில் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஆய்வாளர் சுதா, ஆய்வுக் குழு அலுவலர் முகமது இப்ராஹிம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் ஸ்டான்லியிடம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.14,500 மற்றும் 6 இனிப்பக பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து ஸ்டான்லியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.