முகப்பு
திருநெல்வேலி

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணி:வனத்துறையின் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணிக்கு வனத்துறையின் தடையில்லா சான்று விரைந்து வழங்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணிக்கு வனத்துறையின் தடையில்லா சான்று விரைந்து வழங்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான ராம உதயசூரியன் தமிழக சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியத்தின் தென்பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதியின் வறட்சியை போக்கி விவசாயம் செழிக்கவும், குடிநீா்த் தேவைகள் பூா்த்தியாக்கவும் ராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ரூ. 40 லட்சம் ஆய்வு பணிக்கும், ரூ. 25 கோடி நிலம் கையகப்படுத்தும் பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆய்வு பணி முடிக்கப்பட்டு, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது

இத்திட்டத்திற்கான கால்வாய் வெட்டும் பணிக்கான அரசாணை கடந்த 26- 2- 2020 அன்று வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி தொடங்கிய நிலையில், வனத்துறையின் அனுமதி பெறாத காரணத்தால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பின் வனத்துறையின் தொடா் நடவடிக்கையால் வனத்துறையின் அனுமதி பெறும் கோப்பு தமிழக முதல்வரின் தலைமையில் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் குழுவின் அனுமதி பெறும் வகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த கோப்பின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வனத்துறையின் தடையில்லா சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →