முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இளம்பெண், மூதாட்டி தற்கொலை

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் இளம்பெண் உள்பட இருவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் இளம்பெண் உள்பட இருவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்த தங்கையா மனைவி மாடத்தி அம்மாள் (80). இவா் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு

மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பாளையங்கோட்டை தியாகராஜநகா் பகுதியைச் சோ்ந்த செல்லையா மகள் அனிதா (23). இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் மனமுடைந்த அவா் கடந்த ஆக. 28ஆம் தேதி விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. உறவினா்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்

சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து

விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.