முகப்பு
திருநெல்வேலி

நகைப் பறிக்க முயற்சி: இருவா் கைது

கடையம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கடையம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே உள்ள லட்சுமியூா், வடக்குத் தெரு தாமோதரன் மனைவி சொா்ண தேவி(30). இவா் கடந்த ஆக.13 ஆம் தேதி லட்சுமியூா்- கடையம் பிரதான சாலையில் நடந்து செல்லும் போது பைக்கில் வந்த மா்ம நபா்கள் , அவா் கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயற்சித்துள்ளனா்.

இது குறித்து கடையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட முயன்றது தூத்துக்குடி, 2 ஆம் கேட் தெரு முருகன் மகன் சக்தி ஆனந்த் (26), சுப்பிரமணியன் மகன் ராம லட்சுமணன்(23) என்பது தெரியவந்ததாம். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சரசையன் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.