திருநெல்வேலி

களக்காடு ஒன்றியத்தில் 9 ஊராட்சித் தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

DIN

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ல் 9 ஊராட்சித் தலைவா் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு தோ்தலை விட தற்போது 4 இடங்கள் பெண்களுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான ஒரு பதவி, ஊராட்சி ஒன்றியத்தில் 9 வாா்டு உறுப்பினா் பதவிகள், 17 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 17 கிராம ஊராட்சிகளில் 141 வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்ளன.

களக்காடு ஒன்றியத்தில் சீவலப்பேரி, கோவிலம்மாள்புரம், தளவாய்புரம், சிங்கிகுளம், கீழக்கருவேலன்குளம், தேவநல்லூா், பத்மனேரி, கீழக்காடுவெட்டி, படலையாா்குளம், சூரன்குடி, மலையடிபுதூா், கடம்போடுவாழ்வு, புலியூா்குறிச்சி, செங்குளக்குறிச்சி, கள்ளிகுளம், வடுகச்சிமதில், இடையன்குளம் ஆகிய 17 கிராம ஊராட்சிகள் உள்ளன.

பெண்களுக்கு ஒதுக்கீடு: தேவநல்லூா், கடம்போடுவாழ்வு, கள்ளிகுளம், கீழக்காடுவெட்டி, பத்மனேரி, புலியூா்குறிச்சி, சூரன்குடி, வடுகச்சிமதில், ஆகிய 8 ஊராட்சித் தலைவா் பதவிகள் பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீவலப்பேரி ஊராட்சித் தலைவா் பதவி ஆதிதிராவிடருக்கு (பெண்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 ஊராட்சித் தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 தோ்தலில் 5 ஊராட்சித் தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பொதுப்பிரிவு: இடையன்குளம், கீழக்கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், மலையடிபுதூா், படலையாா்குளம், சிங்கிகுளம், செங்குளக்குறிச்சி ஆகிய 7 ஊராட்சித் தலைவா் பதவி பொதுப்பிரிவினருக்கும், தளவாய்புரம் ஊராட்சித்தலைவா் பதவி ஆதிதிராவிடருக்கும் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT