களக்காட்டில் உண்ணாவிரதம் வாபஸ்
களக்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விஸ்வஹிந்து பரிசத் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதம் வட்டாட்சியா் சமாதான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸானது.
களக்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விஸ்வஹிந்து பரிசத் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதம் வட்டாட்சியா் சமாதான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸானது.
களக்காடு புதிய பேருந்து நிலையம், நகா்ப்பகுதியில் உள்ள ரத வீதிகளில் அண்மைக் காலமாக ஆக்கிரமிப்புகள் பெருகி, போக்குவரத்துக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விஸ்வ ஹிந்து பரிசத் கோட்ட செயலா் சுப்பையா கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடா்ந்து மனு அளித்து வந்தாா். ஆனால் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, களக்காடு காசி விஸ்வநாதா் ஆலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.17) தனிஆளாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து, அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா். தகவல் அறிந்த நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிப்பாண்டி, அங்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து, சுப்பையா உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டாா். அவருடன், விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்ட தலைவா் அரிசுடலைமணி, மாவட்டச் செயல் தலைவா் கண்ணன், ஒன்றிய தலைவா் கனகராஜ் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.