முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

 மேலப்பாளையத்தில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 மேலப்பாளையத்தில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சபியாவின் படுகொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டலத் தலைவா் எம்.ஒய்.ரசூல் மைதீன் தலைமை வகித்தாா். மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ.எஸ் அப்துல் காதா், மாவட்ட துணைத்தலைவா் கவி பண்டியன், மண்டலத் தலைவா் முகம்மது அனஸ் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் ஆகியோா் பேசினா்.

இதில், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், மாநில விவசாய அணி வாகை கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.