இளைஞா் கொலை வழக்கு: மேலும் 4 போ் கைது
முன்னீா்பள்ளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே உள்ள கீழச்செவல் நயினாா்குளம் கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன்(37). இவா், முன்னீா்பள்ளம் அருகே வடுவூா்பட்டி டாஸ்மாக் மதுக்கடை அருகே கடந்த 13 ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து இக்கொலை வழக்கு தொடா்பாக கடந்த 15ஆம் தேதி 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் கொத்தன்குளத்தை சோ்ந்த ராஜகோபால் மகன் ராஜகுரு(37), பச்சை பெருமாள் மகன்கள் விக்னேஸ்வரன்(28), சரவணகுமாா் (29), வேலு மகன் மாரிமுத்து(28) ஆகிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து இவ்வழக்கில் இதுவரை 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும் இது தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.