திருநெல்வேலி

சமூகநீதி நாள்: உறுதிமொழியேற்பு

DIN

திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சமூகநீதிநாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன், மண்டல உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் என்.கே.செந்தாமரை கண்ணன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது. இதில், துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பயக17பஇட: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

பயக17இஞதட: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT