திருநெல்வேலி

மாவட்ட ஹாக்கி: நாலாட்டின்புதூா்அணி முதலிடம்

DIN

கோவில்பட்டி: பாரதியாா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கிப்போட்டியில் நாலாட்டின்புதூா் அணி முதலிடம் பெற்றது.

பிலிப்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான இப்போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் நாலாட்டின்புதூா் லாசா ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஏ அணி மற்றும் பி அணிகள் விளையாடின. 4-0 என்ற கோல் கணக்கில் ஏ அணி முதலிடம் பெற்றது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளிச் செயலா் காா்த்திக் ராமசாமி, மருத்துவா் திருமுருகன், பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ஜெயசீலன்,போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT