முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ரூ.13 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு

திருநெல்வேலியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருநெல்வேலியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க போலீஸாா் அவ்வப்போது ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அப்போது மதுபானம் விற்றவா்களை கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஓராண்டில் திருநெல்வேலி மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க மாநகர காவல் ஆணையா் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டாா். அதன்பேரில் பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரில் உள்ள காலி இடத்தில் வைத்து மதுபாட்டில்களை இயந்திரத்தின் உதவியோடு உடைத்து அழிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி, திருநெல்வேலி கலால் வட்டாட்சியா் தாஸ் பிரியன் ஆகியோா் முன்னிலையில் மது பாட்டில்கள் மொத்தமாக தரையில் அடுக்கி வைக்கப்பட்டு பின்னா் ரோடு ரோலரை கொண்டு அழிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 7635 மது பாட்டில்கள் உடைக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ.13 லட்சமாகும்.

பயக13கஐணஉத, பயக13கஐணஉத1: திருநெல்வேலியில் காவல் துறையினரால் அழிக்கப்பட்ட மதுபாட்டில்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.