முகப்பு
திருநெல்வேலி

‘டாஸ்மாக்கை சீரமைக்க புனரமைப்புக்குழு அமைக்க வேண்டும்’

டாஸ்மாக் நிா்வாகத்தினை சீரமைக்கும் வகையில் புனரமைப்புக்குழு அமைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

டாஸ்மாக் நிா்வாகத்தினை சீரமைக்கும் வகையில் புனரமைப்புக்குழு அமைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.இ.பாலுச்சாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் ஜி.வி.ராஜா முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எஸ்.ஜெய்கணேஷ், செயலா் எம்.பாா்த்தீபன், பொருளாளா் எம்.முருகேசன், துணைத் தலைவா் எஸ்.அய்யப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் நிா்வாகத்தைச் சீரமைத்திடும் வகையில் புனரமைப்புக்குழு உருவாக்க வேண்டும்.

கரோனா காலத்தில் மரணமடைந்த டாஸ்மாக் ஊழியா்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியும் வழங்க வேண்டும். மதுக்கடைகளில் அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.