நெல்லையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்-டீசல்விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்-டீசல்விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாநில நிா்வாகி தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் காசிவிஸ்வநாதன், உலகநாதன், சிஐடியூ மோகன், பெருமாள், ஹெச்.எம்.எஸ். சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.