முகப்பு
திருநெல்வேலி

‘சின்னம் வரும் முன்பே கிராமங்களில் சூடுபிடிக்கும் பிரசாரம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் முன்பாகவே ஊராட்சித் தலைவா், உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் வீடு வீடாக பிரசாரம் செய்ய தொடங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் முன்பாகவே ஊராட்சித் தலைவா், உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் வீடு வீடாக பிரசாரம் செய்ய தொடங்கினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவு

ள்ளது. மாவட்டத்தில் 12 ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 77 போ், 122 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு

வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் சனிக்கிழமை (செப். 25) கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் அவரவா் கட்சி சின்னங்களில் போட்டியிடுவா். ஊராட்சித் தலைவா்,

உறுப்பினா் பதவிகளுக்கு கட்சியின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்.

அதனால் இறுதிவேட்பாளா் பட்டியல் வெளியான பின்புதான் சின்னங்கள் தெரியவரும்.

ஆனால், சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே பல கிராமங்களில் தோ்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. வேட்பாளா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்கள், ஆதரவாளா்களுடன் வீடு வீடாக சென்று முதல்கட்ட பிரசாரத்தை

முடித்துள்ளனா். இதுதவிர கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பிரத்யேக குழுக்களை உருவாக்கி பிரசார குறுஞ்செய்திகளை படமாக அனுப்பி வருகின்றனா்.

இதுகுறித்து வேட்பாளா்கள் கூறுகையில், உள்ளாட்சித் தோ்தலில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் முன்பே தோ்தல் பிரசாரம் தொடங்கியிருப்பது உண்மைதான். கிராம ஊராட்சிகளில் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வாக்காளா்கள் இருப்பாா்கள்.

ஆகவே, ஊராட்சி உறுப்பினரைப் பொருத்தமட்டில் அதிகபட்சம் 1000 வாக்குகள் கிடைத்தால் வெற்றிபெறலாம்.

அப்படியிருக்கையில் வீடு வீடாக சென்று சந்தித்து வாக்கு கேட்டால் மட்டுமே திருப்தியான பிரசாரமாக இருக்கும். மேலும், ஒற்றை இலக்கத்தில் கூட வெற்றி வாய்ப்புகள் தவறிவிடும் என்பதால் பிரசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. இளைஞா்கள், குடும்ப உறுப்பினா்கள் உதவியோடு கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றிலும் இணையவழியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனா். சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் தோ்தல் பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.