மும்பையில் டெலிவரி டெம்போவிலிருந்து 27 எல்பிஜி சிலிண்டர்கள் திருட்டு!
மும்பையில் டெலிவரி டெம்போவிலிருந்து 27 எல்பிஜி சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் டெலிவரி டெம்போவிலிருந்து 27 எல்பிஜி சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் டெலிவரி வாகனம் ஒன்றிலிருந்து நிரப்பப்பட்ட ஐந்து சிலிண்டர்கள் உள்பட மொத்தம் 27 எல்பிஜி சிலிண்டர்கள் திருடு போயுள்ளன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், டெலிவரி ஊழியரான நந்தகுமார் ராம்ராஜ் சோனி, புதன்கிழமை தனது வீட்டருகே உள்ள காக்கா கேனி சௌக்கில் சிலிண்டர்கள் ஏற்றப்பட்ட டெம்போவை நிறுத்தியிருந்ததாகக் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை திரும்பி வந்தபோது, டெம்போ கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததையும், பின்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும் அவர் கண்டார். வாகனத்திலிருந்து நிரப்பப்பட்ட ஐந்து மற்றும் காலியான 22 என மொத்தம் 27 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் திருடப்பட்டிருந்ததாக முதல் தகவல் அறிக்கையை மேற்கோள் காட்டி அந்த அதிகாரி கூறினார்.
இந்தத் திருட்டுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறிய பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளில் பல சந்தேக நபர்கள் வாகனங்களுடன் பதிவாகியுள்ளனர். அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார். அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் எல்பிஜி சிலிண்டர்கள் திருட்டு சம்பவம் அரங்கியிருப்பது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.