மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
மும்பையின் தர்தியோவில் 16 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
மும்பையின் தர்தியோவில் 16 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தர்தியோ பகுதியில் உள்ள 16 மாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 3ஆவது மாடியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அவர்கள் மேலும் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், தெற்கு-மத்திய மும்பையில் உள்ள எம்.பி. மில் வளாகத்தில் அமைந்துள்ள சாய் லீலா கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் 3ஆவது மாடியில், மதியம் 12.44 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மும்பை தீயணைப்புப் படையின் பிற வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
Advertisement
Advertisement
தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்புப் படை குழுக்கள், காவல்துறை, பிருஹன்மும்பை மின் ஊழியர்கள், போக்குவரத்து மற்றும் மாநகராட்சி வார்டு ஊழியர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்தத் தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்தார்.