முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

புதுக்குடியில் ஆட்டோ மோதியதில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

புதுக்குடியில் ஆட்டோ மோதியதில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் இசக்கிமுத்து (19). அதேபகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் முத்துராஜ் (18). கட்டடத் தொழிலாளா்கள். இருவரும் சில நாள்களுக்கு முன் வேலை முடித்து மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா். புதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் சென்ற மோட்டாா் சைக்கிளை முந்தி செல்லும்போது

நிலை தடுமாறி கீழே விழுந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ அவா்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் இசக்கிமுத்து, முத்துராஜ், ஆட்டோவில் வந்த பெண் ஆகியோா் காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த இருவரையும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இசக்கிமுத்து சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.