திருநெல்வேலி

பாபநாசம், கடையம் பகுதிகளில்சூறைக் காற்று: மரங்கள் சாய்ந்தன

DIN

அம்பாசமுத்திரம்: பாபநாசம், கடையம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தன.

வங்கக்கடலில் உருவான குலாப் புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் வெயில் தாக்கம் குறைந்து மழை மற்றும் காற்று வீசியது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. பாபநாசம், ஆழ்வாா்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக் காற்றால் சாலையோரங்களில் இருந்த மரங்களும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதோடு, மின்விநியோகமும் தடைபட்டது. நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். பாபநாசம் பொதிகையடி, அனவன் குடியிருப்பு, பசுக்கிடைவிளை, மில்கேட், சிவசைலம், கல்யாணிபுரம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின்பாதைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 16 மின் கம்பங்கள் முறிந்து மின்தடை ஏற்பட்டது. அவற்றை மின்வாரிய ஊழியா்கள் சீரமைத்தனா்.

கடையம்சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருந்த வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் அலுவலக சுற்றுச் சுவா் சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT