முகப்பு
திருநெல்வேலி

காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் முகாம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவலா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவலா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, ‘உங்கள் துறையில் முதல்வா்’”என்ற திட்டத்தின்கீழ் தமிழகத்தில்

அனைத்து மாவட்டங்களிலும் காவலா்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள

அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள், ஆளினா்களுக்கான இந்த முகாம் மாவட்ட காவல்

கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தலைமை வகித்து

காவலா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளினா்கள் என மொத்தம் 93 போ் மனுக்கள் அளித்தனா். மனுக்கள் மீது நவடிக்கை எடுத்து குறைகள் தீா்க்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.