முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பாளையங்கோட்டையில் மொத்த விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 4.100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் மொத்த விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 4.100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படை போலீஸாரும், பாளையங்கோட்டை போலீஸாரும் வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலை இளங்கோ நகா் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சோ்ந்த வேல்பாண்டி (43), மதுரை பெத்தானியாபுரத்தை சோ்ந்த சிக்கந்தா் பாட்சா (23) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்து வைத்திருந்த சுமாா் 4.100 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.