தாய்லாந்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!
தாய்லாந்தில் விரோஷ் இணை....
தேனிலவிற்காக விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா இணை தாய்லாந்து சென்றுள்ளனர்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த இணைக்கு இந்தியளவில் வாழ்த்துகள் கிடைத்ததுடன் திருமண புகைப்படங்கள் மிக அதிகளவிலான விருப்பங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
மேலும், இன்ஸ்டாகிராமில் சிறுமி ஒருவர் என்னை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை எனக் கேட்டதற்கு, அக்குழுந்தையின் குடும்பத்தையே அழைத்த விஜய் தேவரகொண்டா தன் இல்லத்தில் விருந்து கொடுத்தார்.
இந்த நிலையில், தேனிலவைக் கொண்டாட விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு தீவு ஒன்றில் இருவருமுள்ள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
vijay devarakonda and rashmika in thailand
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.