FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஜய் தேவரகொண்டா கோபப்பட்டதால் அழுத ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டாவால் அழுத ரஷ்மிகா மந்தனா...

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா.
பகிர்:

நடிகை ரஷ்மிகா மந்தனா தன் கணவர் விஜய் தேவரகொண்டாவால் அழுததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் அறிமுகமானவருக்கு நிறைய வெற்றிப்படங்கள் அமைய, அனிமல் மற்றும் புஷ்பா - 2 மூலம் நேஷனல் கிரஷ்-ஆகவே மாறினார்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரணபலி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா முதல்முறை விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்தார்.

அதில், “நானும் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, படப்பிடிப்பில் நான் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, விஜய் தேவரகொண்டா கோபத்தில் என்னைத் திட்டிவிட்டார். சினிமாவுக்குள் நுழைந்த காலம் என்பதால் உடனே அழுகையும் வந்துவிட்டது. பின், இருவருக்கும் நல்ல நட்புறவும் ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Rashmika Mandanna has revealed that she cried because of her husband, Vijay Deverakonda.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments