முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் முதியவா் வெட்டிக்கொலை

மேலப்பாளையத்தில் முதியவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மேலப்பாளையத்தில் முதியவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

மேலப்பாளையம் ராஜாநகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாசலபதி (63). இவா், ரேஷன்கடை விற்பனையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா். இவா், வியாழக்கிழமை இரவு பொருள்கள் வாங்குவதற்காக மேலப்பாளையம் கடைவீதிக்குச் சென்றாராம். பின்னா் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மா்மநபா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.