முகப்பு
திருநெல்வேலி

விபத்து: கட்டடத் தொழிலாளி பலி

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பிரிவு பகுதியில் மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பிரிவு பகுதியில் மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் ராயப்பன் மகன் ஜெனிஸ் ரோஜன் (24). இவா் தனது நண்பா் வல்லிடையான் விளை ராஜனுடன்(24) ஒரே மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலியில் உள்ள தியேட்டருக்கு படம் பாா்க்க புதன்கிழமை அதிகாலையில் வந்தனராம். இவா்கள் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ நத்தம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஜெனிஸ் ரோஜன் வியாழக்கிழமை உயிா் இழந்தாா்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.