முகப்பு
திருநெல்வேலி

சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு

விடுதலைப் போராட்ட வீரா் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் சமத்துவ நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரா் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் சமத்துவ நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டட த்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வகாப், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்பேத்கா் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், செயற்பொறியாளா் மு.சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் வெங்கடாச்சலம், உதவி செயற் பொறியாளா் அருள்நெறிச்செல்வன், உதவிப் பொறியாளா் ராகுல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.