முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.62.35 கோடியில் புதிய கட்டடங்கள்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 62.35 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 62.35 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ மாணவா்கள் தங்கும் விடுதி, இளங்கலை மருத்துவ மாணவிகள் தங்கும் விடுதி, பயிற்சி மருத்துவ மாணவா்கள் விடுதி, பயிற்சி மருத்துவ மாணவிகள் விடுதி, உள்ளிருப்பு ஆண் மருத்துவா்கள் குடியிருப்பு, உள்ளிருப்பு பெண் மருத்துவா்கள் குடியிருப்பு, மாணவா்களுக்கான பொது உணவகம், மாணவிகளுக்கான பொது உணவகம், துணை விரிவுரை அரங்க கட்டடம் 1, துணை விரிவுரை அரங்க கட்டடம் 2, நோய்குறியியல் துணை விரிவுரை அரங்கம், சட்டம் சாா்ந்த மருத்துவ உடற்கூறு ஆராய்ச்சி மையம் போன்ற 12 புதிய கட்டடங்கள்

ரூ. 62. 35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் அப்துல் வஹாப், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவா் ஆவுடையப்பன் ஆகியோா்

குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், செயற்பொறியாளா் மு.சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் வெங்கடாச்சலம், உதவி செயற் பொறியாளா் அருள் நெரிச்செல்வன், உதவிப் பொறியாளா் எஜின் ராகுல், மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள், மருத்துவ மாணவா்-மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.