முகப்பு
திருநெல்வேலி

நெல்லை யில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல் ஆணையா் பாராட்டு

திருநெல்வேலி மாநகா் தெற்கு புறவழிச்சாலையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்ககர வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா் தெற்கு புறவழிச்சாலையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்ககர வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மருத்துவமனையில் தமிழக அரசின் நம்மை காக்கும் இன்னுயிா் காப்போம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் , குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, அவா் தெற்கு புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி அவா்களுக்கு பரிசு அளித்து ஊக்கப்படுத்தினா். தொடா்ந்து அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகர கிழக்கு காவல் துணை ஆணையா் டி.பி. சுரேஷ் குமாா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.