முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் லீபனேன் ஜவுளி நிறுவனபுதிய ஷோரூம் திறப்பு

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் இயங்கி வரும் லீபனேன் ஜவுளி நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட புதிய ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் இயங்கி வரும் லீபனேன் ஜவுளி நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட புதிய ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் லீபனேன் ஜவுளி நிறுவனத்தில் ஏற்கெனவே இருந்த பிரிவுகளுடன் கூடுதலாக பட்டுச்சேலைகளுக்கான பிரத்யேக பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சாந்திநகா் தூய கிறிஸ்து ஆலயத்தின் குருவானவா் டி.பி.சுவாமிதாஸ் ஆரம்ப ஜெபம் செய்து, திறந்து வைத்தாா். சேகர தலைவா் குருவானவா் சாமுவேல் வாழ்த்தி பேசினாா். நிகழ்ச்சியில் வணிகா் சங்க திருநெல்வேலி மண்டல தலைவா் எம்.ஆா்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவா் செல்வராஜ், மாவட்டச் செயலா் எம்.ஆா்.குணசேகரன், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் விநாயகம், ராம்தாஸ், அருள்இளங்கோ, வழக்குரைஞா் ஜெனி, திரவியராஜ், ஓட்டோ நிறுவனத்தின் பாஸ்கா் சிவா, ராம்ராஜ் நிறுவனத்தின் சரண் உள்பட பலா் கலந்துகொண்டனா். கடையின் உரிமையாளா்கள் சாா்லஸ், நா்கீஸ் ஆகியோா் வரவேற்றனா். மேலாளா் அபுபக்கா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கடை ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.