திருநெல்வேலி

கோபாலசமுத்திரத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு கோபாலசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான எஸ். குமரகுரு தலைமை வகித்துப் பேசினாா். கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில், வழக்குரைஞரும் ஆலோசனைக் குழு உறுப்பினருமான சு. பகத்சிங் புகழேந்தி, கிராம உதயம் பொறுப்பாளா்கள் எம். ஜெபமணி, எஸ். ஆறுமுகத்தாய் ஆகியோா் உரையாற்றினா்.

கருத்தரங்கில் பங்கேற்ற பெண்கள், பொதுமக்கள் 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கிராம உதயம் மேலாளா்

பி. மகேஷ்வரி வரவேற்றாா். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் நீதிபதி செந்தில்முரளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT