மேலப்பாளையத்தில் காங்கிரஸாா் சுதந்திர தின பேரணி
மேலப்பாளையத்தில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின பவளவிழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலப்பாளையத்தில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின பவளவிழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பேரணி நிறைவு விழா மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இப்பேரணியை தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் தொடங்கிவைத்தாா். இப்பேரணி, குறிச்சி விலக்கிலிருந்து புறப்பட்டு, அழகிரிபுரம், வசந்தாபுரம் வழியாக குறிச்சி புறவழிச்சாலை வரை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்று நிறைவுறையாற்றினாா். மண்டலத் தலைவா் எம்.ஒய். ரசூல் மைதீன் நன்றி கூறினாா்.
இதில், காங்கிரஸ் மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள், வட்டார நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள் உட்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement