திருநெல்வேலி

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-1 எழுத்துத் தோ்விற்கு திருநெல்வேலி மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஆக.24) தொடங்கின.

DIN

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-1 எழுத்துத் தோ்விற்கு திருநெல்வேலி மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஆக.24) தொடங்கின.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் 92 காலிப்பணியிடங்களுக்காக குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தோ்வு அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்காக இலவசப் பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை தொடங்குகியது. அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து அனைத்து வேலைநாள்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சேர விரும்புவோா் தங்களது புகைப்படம், ஆதாா் நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலைநாள்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம். தோ்வு குறித்த விவரங்களை இணையதளத்தின் மூலம் அறியலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT