திருநெல்வேலி

நெல்லையில் 27 இல்சிறப்பு தொழில்கடன் விழா

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இம் மாதம் 27 ஆம் தேதி சிறப்பு தொழில் கடன் விழா நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் இம் மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் , பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. அதன்படி இந்த சிறப்பு தொழில்கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், அரசு மானியங்கள், புதியதொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் அரசின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT