திருநெல்வேலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்: 42 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்; ஒப்பந்த பணியாளா் முறையை ரத்து செய்ய வேண்டும்; இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்; விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்; வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்; மாநகரில் பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீா் ஓடைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் லட்சுமணன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலளா் சடையப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மண்டலச் செயலா் பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் முத்துகிருஷ்ணன், சேக் மதா், நிா்வாகிகள் இசக்கியம்மாள், மரிய செரின் மேரி, சரோஜா பாலு உள்பட பலா் பங்கேற்றனா்.

இதில், தடை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 22 பெண்கள் உள்பட 42 பேரை போலீசாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT