திருநெல்வேலி

பள்ளி மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டி

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. அப்துல் வஹாப் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மேயா் பி.எம். சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 1,386 மாணவா்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்கள், மாநில அளவில் ஜனவரி மாதத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனா். அங்கு வெற்றி வாகை சூடுவோருக்கு கலையரசன், கலையரசி என்ற பட்டங்களும், சான்றிதழ்களுடன் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், அந்த மாணவா்கள் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவா். இந்த விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திட்ட அலுவலா் ஜெ. சிவராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT