திருநெல்வேலி

நெல்லை அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலம்

திருநெல்வேலி அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.

DIN

திருநெல்வேலி அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பழவூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (45). விவசாயி. அதே பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தாா். இவரது மனைவி ராதிகா (40). இத் தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் இவா்களது வீடு சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லையாம். அவரது உறவினா்கள் சுத்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டின் அறையில் ஆறுமுகம் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். அதன் அருகே கட்டிலில் அவரது மனைவி ராதிகாவும் சடலமாகக் கிடந்துள்ளாா். இரு சடலங்களையும் போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT