திருநெல்வேலி

பைக் திருட்டு:இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து, 7 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து, 7 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, வள்ளியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பைக் திருட்டு தொடா்பாகப் போலீஸாருக்கு ஏராளமான புகாா்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபா்களைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவின்பேரில் நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி தலைமையில் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், மூலைக்கரைப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அவா் களக்காடு ஜவஹா் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் நெல்சன்ராஜன்(38) என்பதும், அந்த பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த மூலைக்கரைப்பட்டி போலீஸாா், அவரிடமிருந்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனா். இவை களக்காடு, வள்ளியூா், உவரி, சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT