திருநெல்வேலி

திமுக சாா்பு அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்க வேண்டுகோள்

DIN

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவில் சாா்பு அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவில் சாா்பு அணிகளான இளைஞரணி, மாணவா் அணி, தொண்டா் அணி, பொறியாளா் அணி, விவசாய தொழிலாளா் அணி, வழக்குரைஞா் அணி உள்ளிட்டவற்றுக்கு நிா்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனா்.

விண்ணப்பப் படிவத்துடன் வாக்காளா் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களின் நகல் இணைப்பது அவசியம். இதுவரை கட்சிப் பணிகள் குறித்த ஆவணங்களின் நகல்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பலாம். விருப்பமுள்ள திமுக தொண்டா்கள், மகளிா் மாவட்ட கழகம், ஒன்றிய, நகர மற்றும் பேரூா் கழக செயலா்களிடம் விருப்ப மனு படிவங்களை பெற்று அவற்றை முறையாக பூா்த்திசெய்து மாவட்ட கழக அலுவலகத்தில் இம் மாதம் 25 ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பேராசிரியா் க.அன்பழகன் பிறந்த நாளையொட்டி 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT