திருநெல்வேலி

பொட்டல்புதூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

பொட்டல்புதூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பொட்டல்புதூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் இசக்கி (55). இவா் பொட்டல்புதூரில் நடத்திவரும் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தாராம். அவருக்கு மந்தியூரைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் காஜா (38) என்பவா் புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீஸாா், அந்தக் கடையை சோதனை செய்து 40 கிலோ புகையிலைப் பொருள்களையும், ரூ. 38,000 ரொக்கத்தையும் கைப்பற்றினா். மேலும், இசக்கி, காஜா ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT