முகப்பு
திருநெல்வேலி

நெல்லை பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை திருட்டு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள அத்திப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேஸ்வரி (36). இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லிடைக்குறிச்சி செல்வதற்கு பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அவரது பையிலிருந்த 5 பவுன் தங்க நகை, கைப்பேசி, ரூ.1,500 ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தச்சநல்லூா் உலகம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காந்தம்மாள் (66). இவா், அங்குள்ள உலகம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மா்மநபா்கள் அவா் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிவிட்டனராம். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இது குறித்த அவா் அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.