உள்ளாட்சித் தோ்தல்: மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடைபெறும் பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவை பிப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ஆம் தேதியும் மேற்கண்ட இடங்களில் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவிட்டுள்ளாா்.