முகப்பு
திருநெல்வேலி

மணல் கடத்தல் வழக்கு: கேரள பிஷப் உள்பட 6 பேருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள, கேரள மாநில கத்தோலிக்க திருச்சபை பிஷப் உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள, கேரள மாநில கத்தோலிக்க திருச்சபை பிஷப் உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் பட்டா நிலத்தில் எம்.சான்ட் குவாரிக்கு அனுமதி பெற்றுக்கொண்டு, ஆற்று மணலை கேரளத்துக்கு கடத்தியதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்பேரில், சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கேரள மாநிலம், பத்தனம்திட்டா கத்தோலிக்க திருச்சபை பிஷப் சாமுல்வேல் மாா் எரேனியஸ் (69), அருள்பணியாளா்கள் ஜாா்ஜ் சாமுவேல் (56), ஷாஜி தாமஸ் (58), ஜீஜோ ஜேம்ஸ் (37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலவியால் (53) ஆகியோா் கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், அவா்கள் 6 பேரும் பிணை வழங்கக்கோரி திருநெல்வேலி இரண்டாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த புதன்கிழமை நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்துஸ 6 பேரும் ஜாமீன் வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனா். அந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜெஸிந்தா மாா்ட்டின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.