முகப்பு
திருநெல்வேலி

நெல்லை: 520 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 520 இடங்களில் 22ஆவது கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.12)நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 520 இடங்களில் 22ஆவது கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.12)நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தில் 32 இடங்களில், நான்குனேரி வட்டாரத்தில் 48 இடங்களில், சேரன்மகாதேவி வட்டாரத்தில் 25 இடங்களில், பாளையங்கோட்டை வட்டாரத்தில் 30 இடங்களில், களக்காடு வட்டாரத்தில் 47 இடங்களில், ராதாபுரம் வட்டாரத்தில் 61 இடங்களில், மானூா் வட்டாரத்தில் 31 இடங்களில், வள்ளியூா் வட்டாரத்தில் 74 இடங்களில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 41 இடங்களில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 131 இடங்களில் என மொத்தம் 520 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மேலும், பாளையங்கோட்டையில் 2 வாகனங்கள், களக்காட்டில் 4 வாகனங்கள், வள்ளியூரில் 6 வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.