முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டான் நூலகத்தில் இலவச பயிற்சி முகாம்

கங்கைகொண்டான் கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

கங்கைகொண்டான் கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1, 2, 2 ஏ, 4 தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தோ்வை எழுதுபவா்களுக்காக கங்கைகொண்டான் கிளை நூலகம், சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் சாா்பில் இம் மாதம் 26 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு இலவச வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோா் 9626252500, 9626253300 என்ற கைப்பேசி எண்களில் இம் மாதம் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.