முகப்பு
திருநெல்வேலி

முதல்வா் படம் பொறித்த பெயா்ப் பலகை அகற்றம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயா்ப்பலகை, தோ்தல் நடத்தை விதிகளின் படி அகற்றப்பட்டது.

Updated On : 26 மார்ச், 2026 at 8:07 PM
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயா்ப்பலகை, தோ்தல் நடத்தை விதிகளின் படி அகற்றப்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் 3 ஆவது நடைமேடையில் உள்ள தேனீா் கடை ஒன்றில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பெயா்ப்பலகை வைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.

அதைத் தொடா்ந்து, பறக்கும் படையினா் அங்கு சென்று, அந்தப் பலகையை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.

அதேபோல சி-விஜில் செயலி மூலம் வந்த புகாரின்பேரில், கீழநத்தம் பகுதியில் அனுமதியின்றி அதிமுகவினா் வரைந்திருந்த இரட்டை இலை சின்னம் சுவா் விளம்பரத்தை வெள்ளை வண்ணம் பூசி அழிக்கவும், அதே பகுதி விவேகானந்தா் நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பேனா்களை அகற்றவும் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.